Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பேட் கேர்ல் தான் கடைசி படம்.. வெற்றிமாறனின் அதிரடியான முடிவு
சினிமா

பேட் கேர்ல் தான் கடைசி படம்.. வெற்றிமாறனின் அதிரடியான முடிவு

Share:

பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். உதயம் NH4 படத்தின் மூலம் தயாரிப்பாளராகக் கால் பதித்தார். இவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் 'Grass Root Film Company'.

பொறியாளன், காக்கா முட்டை, விசாரணை, பாரம் போன்ற பல படங்களை வெற்றிமாறன் தயாரித்தார். இவருடைய தயாரிப்பில் தற்போது பேட் கேர்ல் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் பல தடைகளை மீறி செப்டம்பர் 5ம் தேதி வெளிவரவிருக்கும் நிலையில், அதற்கான விளம்பரப் பணிகளில் வெற்றிமாறன் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் பேசிய வெற்றிமாறன், இயக்குநராக இருப்பது மிகவும் சுதந்திரமானது என்றும், ஆனால் தயாரிப்பாளராக இருப்பது மிகவும் அழுத்தம் நிறைந்தது என்றும் கூறியுள்ளார்.

எனவே பேட் கேர்ல் திரைப்படம்தான் Grass Root Film நிறுவனத்தின் கடைசி படம். அதற்குப் பிறகு நிறுவனத்தை மூடுகிறோம் என வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ளார்.

Related News