Oct 19, 2025
Thisaigal NewsYouTube
இரண்டாவது பாடலை வெளியிட்ட "பைட் கிளப்'"
சினிமா

இரண்டாவது பாடலை வெளியிட்ட "பைட் கிளப்'"

Share:

அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இதைத்தொடர்ந்து முதல் பாடலான 'யாரும் காணாத' பாடலின் வீடியோவும் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான 'இராவணமவன்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Related News