இந்தியா, ஏப்ரல் 18-
இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..
1950 களில் இந்திய சினிமாவில் பிரபலமான இருந்த பாடகர்களுக்கு ரூ.300 சம்பளமாக வழங்கப்பட்டது. ஆனால் இன்று நாட்டின் தலைசிறந்த பாடகர்களுக்கு லட்சங்களில் சம்பளம் வழங்கப்படுகிறது. அதிலும் ஒருவர் குறிப்பாக ஒரு பாடலுக்கு பல கோடி வசூலித்து, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் வேறு யாருமில்லை.. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான்.
தனது இசையால் லட்சக்கணக்கானோர் மனதில் இடம்பிடித்துள்ளவர் ஏ.ஆர். ரஹ்மான். ரஹ்மானின் இசைக்காகவும், அவரின் பாடலுக்காகவும் மட்டுமே வெற்றிகரமாக ஓடிய பல படங்கள் உள்ளன.

இசையமைப்பது மட்டுமின்றி ரஹ்மான் அவ்வப்போது பாடல்களையும் பாடிவருகிறார். அவரின் குரலில் வெளிவந்த பல பாடல்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து எவர்க்ரீன் ஹிட் பாடல்களாக மாறி உள்ளன.
சரி, ஏ.ஆர். ரஹ்மான் ஒரு பாடல் பாட எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா? அவர் ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி சம்பளம் பெறுகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, இதன் மூலம் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் பாடகராக ஏ.ஆர். ரஹ்மான் இருக்கிறார்.. இந்த கட்டணம் இந்தியாவின் மற்ற சிறந்த பாடகர்கள் வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஹ்மானுக்குப் பிறகு, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகி ஸ்ரேயா கோஷல் தான், தற்போது அவர் ஒரு பாடலுக்கு ரூ.25 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சுனிதி சவுகான் மற்றும் அரிஜித் சிங் ஆகியோர் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளனர், இருவரும் ஒரு பாடலுக்கு ரூ. 18-20 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் மற்ற பாடகர்களில் ஷான் மற்றும் சோனு நிகம் ஆகியோர் அடங்குவர், இருவரும் ஒரு பாடலுக்கு ரூ.18 லட்சம் வசூலிக்கின்றனர். நேஹா கக்கர், மிகா மற்றும் ஹனி சிங் ஆகியோர் ஒரு பாடலுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர் என்று கூற்பபடுகிறது.
