ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கூலி. இம்மாதம் 14ம் தேதி இப்படம் வெளியாகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க ரஜினியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, அமீர் கான் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளி வந்தது. மேலும் பிரம்மாண்டமாக இசை வெளியிட்டு விழாவும் நடந்தது.
இந்த விழாவில் பல சுவாரஸ்யமான விஷயங்களை ரஜினிகாந்த் மேடையில் பேசினார். அவ்வகையில் கூலி திரைப்படத்தின் முதல் காட்சிப் படப்பிடிப்பு குறித்து கூறியுள்ளார் ரஜினி.
இதில், "இந்த படத்துல முதல் காட்சி என்ன தெரியுமா? ஹீரோவின் சடலத்திற்கு மாலை போடுவது. யாராவது முதல் காட்சி இப்படி வைப்பாங்களா?" என அவர் பேசியுள்ளார்.
இவர் கூறுவதைப் பார்த்தால், இப்படத்தில் ஹீரோ ரஜினிகாந்த் கதாபாத்திரம் இறந்து விடுவது போல் உள்ளதா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், அதில் கண்டிப்பாக லோகேஷ் திருப்பம் வைத்திருப்பார் எனக் கூறப்படுகிறது.