நடிகர் சிம்பு, கொரோனா காலத்திற்கு பிறகு தனது சினிமா பயணத்தில் பெரிய மாற்றத்தைக் காட்டி வருகிறார்.
உடல் எடையை குறைத்து அடுத்தடுத்து படங்களில் வெற்றிகரமாக நடித்து வருகிறார். கடைசியாக இந்த வருடம் கமல்ஹாசனுடன் சிம்பு நடித்த தக் லைஃப் படம் வெளியாகி இருந்தது. அடுத்தடுத்து சிம்பு நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
நடிகர் சிம்பு அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் குண்டர் கும்பல் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது படம் குறித்து இன்னொரு தகவல் வந்துள்ளது. அது என்னெவென்றால் படத்தில் வில்லனாக நடிக்க வைக்க கன்னட நடிகர்கள் சுதீப் மற்றும் உபேந்திராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த கூட்டணி அமைந்தால் கண்டிப்பாகச் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.