ஜனநாயகன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் படம் ஜனவரி 9ம் தேதி வெளியிட முடியாத ஸீஸ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதனால் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஜனவரி 9ம் தேதி காட்சிகளுக்காக முன்பதிவு செய்யப்பட்டு இருந்த டிக்கெட்டுகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் பணம் திருப்பி கொடுக்கப்பட்டு வருகிறதாம்.
வெளிநாடுகளில் ஏற்கனவே காட்சிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் தற்போது அவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர். படம் வெளியாகும் தேதியில் குழப்பம் நீடிப்பதால் வினியோகஸ்தர்களுக்கு பெரிய அளவில் நஷ்டமும் ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் தயாரிப்பாளர் கேவிஎன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. “எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையால் ஜனநாயகன் வெளியாவது தள்ளிப் போகிறது" என குறிப்பிட்டு இருக்கின்றனர்.








