Oct 21, 2025
Thisaigal NewsYouTube
"குழந்தை பெத்துக்கிட்டு நான் செட்டில் ஆகப்போறேன்.. ஆசையோடு பேசிய சமந்தா.. ஆனா - மனமுருகி பேசிய பிரபலம்
சினிமா

"குழந்தை பெத்துக்கிட்டு நான் செட்டில் ஆகப்போறேன்.. ஆசையோடு பேசிய சமந்தா.. ஆனா - மனமுருகி பேசிய பிரபலம்

Share:

ஆகஸ்ட் 12-

Samantha : நடிகை சமந்தா விவாகரத்து பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு, தன்னிடம் பேசிய சில அழகான விஷயங்கள் குறித்து மனம் திறந்திருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.

சென்னையில் பிறந்து வளர்ந்து, தமிழ் மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றுள் நல்ல பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் சமந்தா. இவர் தன்னோடு இணைந்து தனது முதல் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணம் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்றது.

ஆனால் திருமணமான வெறும் 4 ஆண்டுகளில், இந்த ஜோடிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விரைவில் நாக சைதன்யாவிற்கு பிரபல நடிகை சோபிதாவுடன் திருமணம் நடக்க உள்ள நிலையில், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் சமந்தா தன்னிடம் கூறிய சில விஷயங்களை இப்போது வெளியிட்டுள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான "சகுந்தலம்" என்கின்ற திரைப்படத்தை இயக்கியது குணசேகர், அவருடைய மகள் நீலிமா குணா தான் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளராக பணியாற்றினார். அவர் கடந்த 2021ம் ஆண்டு, அதாவது சமந்தா விவாகரத்து பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் அவரை நேரில் சந்தித்து அந்த கதையை குறித்து பேசியுள்ளார். சமந்தாவிற்கு அந்த கதை பிடித்துப்போக அதில் நடிப்பதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் அந்த திரைப்பட பணிகளை முடித்து தருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஏனென்றால் அதன் பிறகு தான் தனது கணவரோடு நேரத்தை செலவிட்டு, குழந்தைகளை பெற்றுக் கொண்டு வாழ்க்கையில் செட்டிலாக விரும்புவதாக சமந்தா தன்னிடம் கூறியதாக நீலிமா கூறியிருக்கிறார். நீலிமாவும் அந்த படத்தை விரைவாக எடுத்து முடித்த மூன்று மாதங்களில் தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையே விவாகரத்து ஏற்பட்டுள்ளது.

Related News