தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் துல்கர் சல்மான். மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு என தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர். தற்போது, இவர் தெலுங்கு இயக்குனர் பவன் சாதினேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'ஆகாசமோல் ஓகா தாரா' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகை ஹானி ஷர்மா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இது அவருக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு என்றே கூறலாம்.