விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் வில்லனாக ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்திருந்தார்.
கேஜிஎப் 2 படத்தில் அவர் நடித்திருந்த நிலையில், அந்தப் படம் மிகப் பெரிய வசூலைக் குவித்தது. அதனைத் தொடர்ந்துதான் லியோ படத்தில் சஞ்சய் தத் நடித்து இருந்தார்.
லியோவில் விஜயின் அப்பாவாக இவர் வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தார். இவர் படத்தில் நடிக்க இருக்கும் செய்தியே அப்போது பெரும் எதிர்பார்த்தை ஏற்படுத்தி இருந்தது. அப்படிப்பட்டவர் ஏன் லோகேஷ்மீது கோபப்பட வேண்டும் என வினா வரலாம்.
அதற்கான காரணத்தையும் அவர் சொல்லியிருக்கிறார். முதலில் தளபதி விஜய் உடன் பணியாற்றியது எனக்கு சந்தோஷம். எனக்கு அது ரொம்பவும் பிடித்திருந்தது. ஆனால் லோகேஷ் மீது எனக்கு கோபம் இருக்கிறது.
ஏனென்றால் இந்த படத்தில் எனக்கு அவர் பெரிய கதாபாத்திரம் கொடுக்கவில்லை. என்னை வீணடித்து விட்டார் என சிரித்தபடி கூறியுள்ளார். அந்த காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது.