ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறார். இப்படம் தற்காலிகமாக சூர்யா 46 என அழைக்கப்படுகிறது. இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார்.
இயக்குனர் வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் இதற்கு முன் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதே போல் லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி மற்றும் ராம்கி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று மெகா ஹிட் திரைப்படமாக இருந்தது.
இந்நிலையில் அண்மையில் நடந்த நேர்காணலில், இயக்குநர் வெங்கி அட்லுரி, லக்கி பாஸ்கர் படத்தின் பாகம் 2டை உருவாக்கத் திட்டம் இருப்பதாகக் கூறியுள்ளார்.








