இந்தியா, மே 11-
தமிழ் திரையுலகில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக மட்டுமே பயணித்து வந்து நடிகர் சூரி, இன்று ஒரு ஆக்சன் ஹீரோவாக தன்னை உருமாற்றி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளார்.
மதுரையில் கடந்த 1977-ம் ஆண்டு பிறந்த நடிகர் தான் சூரி, தமிழ் திரையுலகில் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் ஆக களம் இறங்கி, அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க தொடங்கி இன்று முன்னணி ஹீரோக்கள் வரிசையில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல அஜித் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் காமெடிகளாக மிகப்பெரிய அளவில் பயணித்து வந்த சூரிக்கு வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் ஒரு மிகப் பெரிய பிரேக்கிங் பாயிண்டாக அமைந்தது.
இந்நிலையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் "கருடன்" என்கின்ற திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தனோடு இணைந்து சூரி நடித்து வருகிறார். இந்த திரைப்படமும் இந்த மே மாத இறுதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.