இந்தியா, ஏப்ரல் 08-
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய 171வது திரைப்பட டீசரை தான் பார்த்துவிட்டதாக ஒரு பிரபலம் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல பல திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இயக்குனர் நான் லோகேஷ் கனகராஜ். அவருடைய இயக்கத்தில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 171வது திரைப்படத்தை நடிக்க உள்ளார்.
ஏற்கனவே இந்த திரைப்படத்தில் First look போஸ்டர் வெளியாகி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் ஏப்ரல் 22ஆம் தேதி தலைவர் 171 படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக திரு. லோகேஷ் கனகராஜ் அவர்களே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் "அனிமல்" திரைப்பட இயக்குனர் சந்திப்பு ரெட்டி தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தினுடைய டீசர் பார்த்துவிட்டதாகவும். அதை கண்டு பிரம்மித்த தான், அந்த படத்துக்காக காத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த செய்தி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.