இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரேம்ஜி.
இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 - ஆம் ஆண்டு வெளி வந்த சென்னை 600028 படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து "என்ன கொடுமை சார் இது" என்ற வசனம் மூலம் பிரபலமானார்.
கடைசியாக இவர் விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பிரேம்ஜி இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரேம்ஜி மனைவி இந்து கர்ப்பமாக இருந்த நிலையில், பிரேம்ஜி - இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.








