பிரபல நடிகை ஒருவரைக் காரில் கடத்திச் சென்று வன்கொடுமை செய்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அதன் பின் ஜாமினில் வெளியே வந்தார்.
அந்த வழக்கின் விசாரணை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க திலீப் படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் அவர் நடிப்பில் Prince and Family என்ற படம் ரிலீஸ் ஆகி இருந்தது.
நடிகை கடத்தல் மற்றும் வன்கொடுமை வழக்கில் விசாரணை நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நடிகையுடன் இருக்கும் பகையில் திலீப் இந்தக் குற்றத்தை ஆள் வைத்துச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நிலையில், அவர் வழக்கில் 8வது குற்றவாளியாக இருக்கிறார்.
இந்த வழக்கின் தீர்ப்பு வரும் டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.








