ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் மதராஸி. இப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் நடிகர் வித்யுத் ஜாம்வால்.
இவர் தமிழில் வெளிவந்த பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இதில் துப்பாக்கி படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த வில்லன் கதாப்பாத்திரம் இன்று வரை ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
அதன் பின், மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் வித்யுத் ஜாம்வால் அடுத்ததாக ஹாலிவுட்டில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல வீடியோ கேமான ஸ்டிரிட் ஃபைட்டர் Street Fighter சீரிஸை மையமாக வைத்து ஹாலிவுட்டில் படம் ஒன்று உருவாகவுள்ளது. இதில் வரும் Dhalsim என்கிற கதாபாத்திரத்தில் வித்யுத் ஜாம்வால் நடிக்கிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் கோடி ரோட்ஸ், ரோமன் ரெய்ன்ஸ், ஜேசன் மோமோ, ஒலிவியர் ரிச்சர்ட்ஸ் போன்ற பல பிரபலங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.