ரமேஷ் பாலகிருஷ்ணா இயக்கத்தில் அமீர், வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ள படம் 'மாயவலை'. வின்சென்ட் அசோகன், சஞ்சனாஷெட்டி, சரண், தீனா, சத்யா உள்பட பலர் படத்தில் நடித்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் அமீர் பேசியதாவது, சினிமா அறிவு உள்ளவர்களை ரசிப்பது தான் எனது வேலை. இந்த படத்தில் நடிப்பதற்கு நிறைய நடிகர்களிடம் சென்றோம். யாரும் நடிக்க வரவில்லை.
அதனால் நான் நடித்தேன். இது எனக்கே புது அனுபவமாக உள்ளது. வெற்றிமாறன் படத்தை பார்த்துவிட்டு தானே வெளியிடுவதாக கூறினார். ரஜினிக்கும் விஜய்க்கும் பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்கள் தேவைப்படுகிறார்கள்.
எனக்கு வெற்றிமாறனோ, வெற்றிமாறனுக்கு நானோ தேவைப்படுவது புதிதல்ல. கொஞ்சம் கோபக்காரன் நான் சுயமரியாதையுடன் வாழ்பவன். சூர்யாவிடம் இருந்து ஒதுங்கி விட்டேன்.
ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் போகவில்லை என்று கூறினார்.