Oct 20, 2025
Thisaigal NewsYouTube
அப்பாவிற்கு 100 வயது! தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே.. சினேகன் நெகிழ்ச்சி!
சினிமா

அப்பாவிற்கு 100 வயது! தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே.. சினேகன் நெகிழ்ச்சி!

Share:

இந்தியா, ஜூலை 17-

தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது முக்கிய செய்தியை பகிர்ந்துள்ளார் கவிஞர் சினேகன்.

Bigg boss snehan who celebrated his father's 100th birthday video goes viral-rag

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நான்கு சீசன்களுக்குப் பிறகும், முதல் சீசன் இன்னும் பல ரசிகர்களுக்கு சிறந்த சீசன். இந்த சீசனில் ஆரவ் வென்றார். சினேகன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

சினேகன் அதற்கு முன் பல படங்களில் பாடல்கள் எழுதியிருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் இந்த பாடல்கள் அனைத்தும் இவரே எழுதியது பலருக்கும் தெரிய வந்தது என்றே சொல்லலாம். பிக்பாஸில் இருந்தபோது, ​​அவர் தனது சக போட்டியாளர்களை அடிக்கடி கட்டிப்பிடித்து, அவரை கட்டிப்பிடி மருத்துவர் என்ற பட்டத்தை பெற்றார்.

Bigg boss snehan who celebrated his father's 100th birthday video goes viral-rag

சினேகன் தன்னை விட 16 வயது குறைந்த சீரியல் நடிகை கன்னிகாவை மணந்து சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையில் சிக்கினார். இருவரும் 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கன்னிகாவை திருமணம் செய்ததில் இருந்தே, சினேகன் 10 வயது இளைஞனாக மாறிவிட்டார் என்றே சொல்லலாம். ஸ்டைலிஷ் ஆன ட்ரெஸ், ட்ரெண்டி லுக் என அவ்வப்போது கலக்கி வரும் சினேகன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், அப்பாவிற்கு 100 வயது என்று பதிவிட்டு சினேகன் தனது அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் சினேகன் அப்பா இன்னும் நீண்ட காலம் நன்றாக வாழ வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

Related News