இயக்குநர் சித்திக் இயக்கத்தில் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்து 2001ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘ப்ரண்ட்ஸ்’. இப்படத்தில் ரமேஷ் கண்ணா, தேவயானி, வடிவேலு, விஜயலக்ஷ்மி, சார்லி, ராதாரவி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 2001ல் மாபெரும் வெற்றியடைந்த இப்படம், கடந்த வாரம் மீண்டும் வெளியிடப்பட்டது. திரையரங்கில் ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.
‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக தேவயானி மற்றும் விஜயலக்ஷ்மி நடித்திருந்தனர். ஆனால், இவர்கள் இருவருக்கு முன் வேறு இரண்டு நடிகைகள் இந்த கதாபாத்திரங்களில் நடிக்கவிருந்தனர். தேவயானி நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா மற்றும் விஜயலக்ஷ்மி நடித்திருந்த கதாபாத்திரத்தில் சுவலட்சுமி நடிக்கவிருந்தனர்.
அதற்கான போட்டோஷூட் கூட நடந்துள்ளது. ஆனால், சில காரணங்களால் இவர்கள் இருவரையும் நீக்கி விட்டு தேவயானி மற்றும் விஜயலட்சுமியை நடிக்க வைத்ததாகச் சொல்லப்படுகிறது.








