Dec 23, 2025
Thisaigal NewsYouTube
பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம்
சினிமா

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம்

Share:

லவ் டுடே படத்தில் ஹீரோவாக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தனது முதல் படத்திலேயே ரூ.100 கோடி வசூல் செய்தார்.

அதைத் தொடர்ந்து டிராகன் மற்றும் Dude ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரூ.100 கோடியைக் கடந்து வசூல் செய்தன. அடுத்ததாக LiK படம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதனின் அடுத்த புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் தனது புதிய படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

லவ் டுடே படத்திற்கு பின் பிரதீப், தானே இயக்கி ஹீரோவாக நடிக்கவிருக்கும் படம் இதுவாகும். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் Sci-fi காதல் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது என தகவல் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரலாம்.

Related News