லோகேஷ் கனகராஜ் சிறந்த இயக்குனராக தற்போது பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறார். இவர் இயக்கியிருக்கும் கூலி படம் திரைக்கு வருவதற்கு முன்பே மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவர் எடுத்த அத்தனை படங்களும் ஹிட் ஆனதால், தனக்கென ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
இவரது படத்தில் எல்லாமே தொடர்ச்சிக் கதையாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போலத்தான் கூலியின் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது ஒரு டைம் டிராவல்படம் எனவும் பேசப்பட்டு வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ரஜினிகாந்த் லோகேஷுடன் இன்னும் ஒரு படம் பண்ணத் தீவிரமாக இருக்கிறாராம். வெளியிடத் தயாராக இருக்கும் கூலிபடத்தை ரஜினிகாந்த பார்த்து, அவருக்கு ரொம்பப் பிடித்து விட்டதாம்.
அதனால் மீண்டும் லேகேஷுடன் கூட்டணி சேர பச்சை கோடி காட்டியுள்ளார் ரஜினி. அதுவும் கூலி படத்திற்கே இவ்ளோ எதிர்பார்ப்பு என்றால், மீண்டும் இணையும் கூட்டணிக்கு இப்போதிருந்தே வரவேற்பு அதிகமாக உள்ளதாம்.