தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் நேற்று நடந்தது.
இதனால் திருப்பதி மலைக்கு சென்ற பஸ்கள், பக்தர்களின் வாகனங்களை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக போலீசார் திருப்பி விட்டனர்.
இந்த சாலை குறுகலானதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.