தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டிருக்கும் அஜித்குமார் தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்துள்ளார்.
'நான் சினிமாவுக்கு வந்த புதிதில் தமிழ் பேசத் தெரியாது. தமிழை கற்றுக் கொண்டு பேசக் கடுமையாக உழைத்தேன். அந்த போராட்டம் பெரியது. வந்த புதிதில் உன் பெயர் பிரபலமான பெயர் போல இல்லையே... பெயரை மாற்றுப்பா... என்றார்கள். ஆனால் சினிமாவுக்காக என் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை மாற்ற விரும்பவில்லை. எனவே வேறு பெயரைச் சூட்டவில்லை.
நான் அடைந்த வெற்றிகள் எளிதாக கிடைத்தது அல்ல. கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் பின்னரே அவை சாத்தியமானது. மேலும் இப்போதில் இருந்து வருகிற மார்ச் மாதம் வரை கார் ரேசில் பிசியாக இருக்கிறேன். எனவே இந்த காலகட்டத்தில் படப்பிடிப்பில் நான் கலந்து கொள்ள முடியாது என்றாலும், எனது புதிய படத்தின் அறிவிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் எனக் கூறியுள்ளார்.
'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித்குமார் புதிய படம் நடிக்கவுள்ளார். இது அவரது 64-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.








