Oct 18, 2026
Thisaigal NewsYouTube

இதுக்கெல்லாமா ட்ரோல் செய்வீங்க..?’ பிரியங்கா மோகனை ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்! என்ன நடந்தது?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இதுக்கெல்லாமா ட்ரோல் செய்வீங்க..?’ பிரியங்கா மோகனை ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்! என்ன நடந்தது?

செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்களுடன் கோபமாக நடந்துகொண்டதற்காக சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளார் நடிகை பிரியங்கா மோகன்.

திரையுலகில் கன்னட படம் மூலம் எண்ட்ரி கொடுத்த நடிகை பிரியங்கா மோகன், நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடித்த அடுத்த படமான ’டான்’, சூர்யா நடிப்பில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்’, தனுஷ் நடிப்பில் உருவான ’கேப்டன் மில்லர்’ போன்ற படங்களில் கமிட்டாகி தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

சமீபத்தில் நானி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த ’சரிபோதா சனிவாரம்’ படத்தில் நடித்திருந்த பிரியங்கா மோகன், தனுஷ் இயக்கிவரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகி வைரலானது.

இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவிருக்கும் பிரதர்ஸ் திரைப்படத்திலும் பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் நிலையில், படத்திற்கான புரோமோசன் வேலைகள் நடந்துவருகின்றன.

ரசிகர்களுடன் கோபமாக நடந்துகொண்ட பிரியங்கா மோகன்..

நடிகை பிரியங்கா மோகன் சமூக வலைதளங்களில் அதிகப்படியாக ட்ரோல் செய்யப்படுவதற்கு காரணமாக இரண்டு வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ஒரு வீடியோவில் ‘நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரியங்கா மோகனை காரிலிருந்து இறங்கவிடாமல் செல்ஃபிக்கு முந்தியடித்த ரசிகர்கள் மீது ‘கார்குள்ளயே வந்து உட்கார்ந்துக்கோங்களேன்’ என்று கூறி கோபத்தை வெளிப்படுத்தினார்.

மற்றொரு வீடியோவில் பிரதர் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் செல்ஃபி எடுக்கவந்த ரசிகர் ஒருவரிடம் கோபமாக பேசிவிட்டு பின்பு செல்ஃபி எடுத்துக்கொண்டார். அந்த வீடியோவில், “இப்படி என்னை தொடர்ந்து ஃபாலோவ் பண்ணிட்டே வரக்கூடாது புரியுதா என எச்சரிக்கை செய்துவிட்டு செல்ஃபி எடுத்துகொண்டு அனுப்பிவைத்தார். தொடர்ந்து உடன் அமர்ந்திருந்த சரண்யா பொன்வண்ணனிடம் இந்த பையன் மாலில் இருந்து என்ன ஃபாலோவ் பண்ணி வீடுவரைக்கும் வந்துட்டான்” என்று கூறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த இரண்டு வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள், “அந்த இருவர் மீதும் எந்தத் தவறும் இல்லை, செல்ஃபி எடுக்க வந்ததில் என்ன தவறு இருக்கிறது. சினிமாவுக்கு வருவதே ஃபேம் கிடைக்கும் என்பதற்காகத்தான், செல்ஃபிக்காக இவ்வளவு கோவமாக நடந்துகொள்வது சரியில்லை” என்றும். ’ரசிகர்களுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என கற்றுக்கொள்ளுங்கள்’ என்றும் ட்ரோல் செய்துவருகின்றனர். இன்னும் சிலர் மிகமோசமான விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →