நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லீ படம் இந்த வருடம் அதிகம் வசூலித்த படங்களில் ஒன்றாக இருக்கிறது. அஜித் தற்போது கார் பந்தயங்களில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார். அதனால் அவர் படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை.
பந்தயத் தவணை முடிந்து இந்த வருடத்தின் இறுதியில் தான் அவர் அடுத்த படத்தை தொடங்குவார் என ஏற்கனவே அறிவித்து விட்டார். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான AK64 படத்தை இயக்குவதை உறுதிச் செய்து இருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகும் மீண்டும் இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவித்த ஆதிக், படத்தில் இருக்கும் மற்ற பிரபலங்கள் பற்றிய தகவல் அப்போது அறிவிக்கப்படும் எனக் கூறி இருக்கிறார். மேலும் இது குண்டர் கும்பல் படம் இல்லை என்பதையும் அவர் கூறியிருக்கிறார்.