Jan 8, 2026
Thisaigal NewsYouTube
எஸ்ஜே சூர்யாவுக்குக் காயம்
சினிமா

எஸ்ஜே சூர்யாவுக்குக் காயம்

Share:

இயக்குனர், நடிகர் என பல திறமைகள் கொண்டவர் எஸ்.ஜே சூர்யா. அவர் தமிழ் சினிமாவில் அண்மைய காலமாக வில்லன் கதாப்பாத்திரங்களில் மிரட்டி வருகிறார்.

நீண்ட காலத்திற்கு பிறகு எஸ்ஜே சூர்யா தற்போது மீண்டும் படம் இயக்கத் தொடங்கி இருக்கிறார். அவர் கில்லர் என்ற படத்தைத் தற்போது இயக்கி நடித்து வருகிறார்.

கில்லர் படத்தின் படப்பிடிப்பில் நடத்த விபத்தில் எஸ்ஜே சூர்யா சிக்கி காயம் அடைந்து இருக்கிறார். சண்டைக் காட்சி எடுத்த போது இரும்புக் கம்பியில் மோதி காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது ஓய்வில் இருக்கிறாராம் அவர். இரண்டு வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.  

Related News