Nov 16, 2025
Thisaigal NewsYouTube
ராஜமௌலியின் படத்தில் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
சினிமா

ராஜமௌலியின் படத்தில் நடிக்க மறுத்த முன்னணி நடிகை

Share:

இந்திய சினிமாவின் பெருமைகளில் ஒன்று இயக்குநர் ராஜமௌலி. நான் ஈ, மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் என பல பிரம்மாண்ட திரைப்படங்களை ராஜமௌலி இயக்கியுள்ளார். அப்படி அவர் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் 'மரியாதை ராமண்ணா'.

தெலுங்கில் வெளிவந்த இப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தில் சுனில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் சுனிலுக்கு ஜோடியாக நடிகை சலோனி நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் இவருக்கு முன் கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகை ஒருவர் மறுப்பு தெரிவித்தாராம்.

அவர் வேறு யாருமில்லை தென்னிந்திய சினிமாவில் 22 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாதான். ராஜமௌலி இப்படத்தில் திரிஷா அல்லது அனுஷ்கா கதாநாயகியாக நடித்தால் பொருத்தமாக இருப்பார்கள் என நினைத்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் திரிஷாவை அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் அப்படத்தை நிராகரித்துள்ளார். அவர் ஏற்கனவே பல படங்களில் பிஸியாக நடித்து வந்த காரணத்தினால் இப்படத்தில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Related News