Oct 17, 2025
Thisaigal NewsYouTube
சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி வேறொருவர்
சினிமா

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி வேறொருவர்

Share:

அமரன் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரிய எதிர்ப்பார்ப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் மதராஸி. ஏ.ஆர்.முருகதாஸுடன், சிவகார்த்திகேயன் முதல் முறையாகக் கூட்டணி அமைத்த இந்த படத்தில் வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் ரவிச்சந்திரனின் இசையமைப்பில் வெளியான பாடல்களும் நல்ல ஹிட் தான். ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க முருகதாஸ் முதலில் அணுகிய நாயகி குறித்த தகவல் வந்துள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை. சீதா ராமன் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மிருணாள் தாகூர் தான் அது. மாலதி கதாபாத்திரத்தில் முதலில் அவர் தான் நடிக்க இருந்துள்ளாராம். பின் சில காரணங்களால் அவ்வாய்ப்பு தவறியது. அதன் பின்னரே ருக்மிணி வசந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Related News