இந்தியா, மே 03-
இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தில் இருந்து.நாகர்ஜூனாவின் வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் டீசர் வீடியோவை பாக்குழு வெளியிட்டுள்ளது.
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என ஆல்ரவுண்டராக மாறி தன்னுடைய அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து, தன்னுடைய 50-ஆவது படமான 'ராயன்' படத்தை தானே இயக்கி, அதில் நடித்தும் உள்ளார். மல்டி ஸ்டார் படமாக. வடசென்னை பகுதியில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக 'ராயன்' படத்தை தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
'ராயன் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதை தொடர்ந்து தன்னுடைய அக்கா மகனை கதாநாயகனாகவும், அனிகா சுரேந்திரனை நாயகியாகவும் வைத்து ஒரு படத்தை இயக்கி உள்ளார் தனுஷ். விரைவில் இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, தமிழ் மற்றும் தெலுங்கில், இயக்குனர் சேகர் கமுல்லா இயக்கத்தில் உருவாகி வரும் 'குபேரா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிக்கா நடிக்க, முக்கிய ரோலில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் ஒன்றை படக்குழு வெளியிட... அதில் ஒரு பிச்சைக்காரர் போல் அழுக்கு சட்டை மற்றும், கலைந்த தலை முடி, தாடி என வித்தியாசமான கெட்டப்பில் இருந்தார். எனவே ரசிகர்கள் பலர் கண்டிப்பாக இப்படம் தேசிய விருதை வெல்லும் என தங்களின் கருத்தை தெரிவித்து வந்தனர்.
இதை தொடர்ந்து நடிகர் நாகார்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. கட்டுக்கட்டாக பணம் ஒரு லாரியில் அடிக்கி இருக்க, அதன் முன் நாகர்ஜுனா கையில் குடையுடன் நிற்கிறார். அவர் வரும் வழியில் 500 ரூபாய் நோட்டு ஒன்று மழையில் நனைந்தபடி இருக்க, பின்னர் தன்னுடைய பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்து கட்டு கட்டாக அடுக்கி இருக்கும் பணத்தின் மேல் வைக்கிறார். புதிர் போடும் வகையில் வெளியாகியுள்ள இந்த டீசர்... படம் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளதாகவும், படத்தை காண கார்த்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.