Jan 16, 2026
Thisaigal NewsYouTube
CWC புகழ் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!
சினிமா

CWC புகழ் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

Share:

இந்தியா, மார்ச் 25.

விஜய் டிவியில் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் புகழ். இதன் மூலம் அவர் காமெடியனாக சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘மிஸ்டர் ஸூ கீப்பர்’ என்ற படத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது. விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து புகழ் ஹீரோவாக நடிக்கும் மற்றொரு படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. டைமண்ட் தோனி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஜோஜின் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Related News