திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே நெக்னாமலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 170-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 750 பேர் வசித்து வருகின்றன
இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் அன்றாட தேவைக்கும், மருத்துவ தேவைக்கும் 7 கிலோமீட்டர் நடந்தே சென்று வரக்கூடிய சூழ்நிலை உள்ளது.
கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்டாலும், உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலையும் தொடர்ந்து வருகிறது.