விடுதலை 2 படத்திற்குப் பின் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.
கடந்த சில வாரங்களுக்கு முன், இப்படம் குறித்து சிறிய வீடியோ ஒன்றை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டு இருந்தார். மேலும், இயக்குநர் வெற்றிமாறன் செல்லும் இடங்களில் எல்லாம் சிம்பு படத்தின் தகவல் கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கலைப்புலி தாணு வெளியிட்டுள்ளார். வெற்றிமாறன் - சிலம்பரசன் இணைந்துள்ள இப்படத்திற்கு 'அரசன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.