தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது பராசக்தி என்ற திரைப்படத்தைக் கைவசம் வைத்துள்ளார்.
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பராசத்தி திரைப்படம் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் நாயகி குறித்து அதிரடி தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'லோகா' பட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








