குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் அஜித்தின் 64வது படத்தையும் இயக்கவுள்ளார் எனக் கூறப்பட்டது. இதற்கான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும், படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
அறிவிப்பு எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் AK 64 படத்தின் அறிவிப்பு அடுத்த வாரம் வெளிவரவுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி காத்திருக்கிறது.








