Jan 16, 2026
Thisaigal NewsYouTube
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்
சினிமா

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்

Share:

இந்தியா, ஏப்ரல் 11-

நடிகர் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இதை தொடர்ந்து, இவர் இயக்கிய 'லவ் டுடே' படத்தில் இவரே கதாநாயகனாக நடித்தார். இப்படம் 5 கோடியில் எடுக்கப்பட்டு சுமார் 100 கோடி வரை வசூல் சாதனை செய்தது.

இந்த படத்தை தொடர்ந்து, படம் இயக்குவதை விட ஹீரோவாக நடிப்பதில் பிஸியாகியுள்ள பிரதீப் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'LIC' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது தன்னுடைய அடுத்த பட Announcement வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஓ மை கடவுளே படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கும் இந்த படத்தை அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். இந்த படத்தின் Announcement வீடியோவே ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News