Oct 19, 2025
Thisaigal NewsYouTube
20 வருடங்களுக்குப் பின் எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர் ரஹ்மான்
சினிமா

20 வருடங்களுக்குப் பின் எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர் ரஹ்மான்

Share:

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் எஸ்.ஜே சூர்யா. குறிப்பாக பல நட்சத்திர ஹீரோக்களுக்கு அவர் வில்லனாக நடித்து வருகிறார். அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன.

இந்நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். படத்திற்குக் கில்லர் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் பூஜை விழா அண்மையில் நடைபெற்றது. தற்போது படத்தின் இசையமைப்பாளரை படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

படக்குழு வெளியிட்ட போஸ்டரில் "நாம் இருவரும் சேரும் சமயம், நம் கைகளிலே வரும் இமயம். நாம் தொட்டது எதுவும் அமையும். இது அன்பால் இணைந்த இதயம்" என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. எஸ் ஜே சூர்யா நடித்து இயக்கிய நியூ, அன்பே ஆருயிரே படத்திற்கு ஏற்கனவே ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

கில்லர் படத்தில் நடிக்கும் பிற நடிகர்களைப் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படம் இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய பகுதிகளில் படமாக்கப்படவிருக்கிறது. எஸ்ஜே சூர்யா சர்தார் 2 மற்றும் லவ் இன்சூரன் கம்பெனி ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News