Jan 16, 2026
Thisaigal NewsYouTube
நாடோடிகள் படத்தில் நடிக்க முதலில் தேர்வானது சசிகுமார் இல்லையாம்
சினிமா

நாடோடிகள் படத்தில் நடிக்க முதலில் தேர்வானது சசிகுமார் இல்லையாம்

Share:

தமிழ் சினிமாவில் ஒரு இயல்பான கதைக்களத்தை கொண்டு கடந்த 2008ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாடோடிகள். சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்க கஞ்சா கருப்பு, விஜய் வசந்த், அனன்யா, அபிநயா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

காதலுக்காக நாங்கள் எதையும் செய்வோம் என துணிச்சலாக கைகோர்த்த நண்பர்களைப் பற்றிய கதைதான் அந்தப் படம். நாடோடிகள் என பெயர் சொன்னதுமே மக்களுக்கு சம்போ சிவ சம்போ என விறுவிறுப்பானப் பாடல் தான் முதலில் நியாபகம் வரும். கதை, நடிகர்கள், இசை என எல்லாவற்றிலும் சிறப்பாக இருந்தது இந்தப் படம்.

ஒரு படம் இயக்குனர் உருவாக்கும் போது ஒருவரை மனதில் வைத்து உருவாக்குவார். ஆனால் தயாரிப்பாளரிடம் சென்றால் நாம் நினைத்தது சில சமயம் நிறைவேறாது. அப்படி நாடோடிகள் படத்தில் சசிகுமார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சசிகுமார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இயக்குனரும் நடிகருமான சேரன் தானாம். இதனை ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.

Related News