Oct 19, 2025
Thisaigal NewsYouTube
"சில படங்களின் வெற்றி ஆபத்தானது" - பாடலாசிரியரின் "பளிச்" கருத்து
சினிமா

"சில படங்களின் வெற்றி ஆபத்தானது" - பாடலாசிரியரின் "பளிச்" கருத்து

Share:

இந்தி திரையுலகில் கதாசிரியராகவும், பாடலாசிரியராகவும் பல வெற்றி படங்களில் பணியாற்றியவர், ஜாவெத் அக்தர் (Javed Akhtar).

5 முறை தேசிய விருதுகளை வென்ற ஜாவெத், 1999ல் பத்மஸ்ரீ பட்டம் பெற்றார்.

தற்போது 78 வயதாகும் ஜாவெத், திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் போதெல்லாம், தனது கருத்துக்களை கூற தயங்காதவர்.

மகாராஷ்டிரா மாநில அவுரங்கபாத் நகரில் அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஜாவெத்திடம் தற்கால திரைப்படங்களின் தரம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

படங்களின் வெற்றிக்கும் தரத்திற்கும் ரசிகர்கள்தான் பொறுப்பு. தற்காலத்தில் வெற்றி பெறும் படங்களின் தரம் குறித்து நான் கவலைப்படுகிறேன்.

ஒரு திரைப்படத்தில், பெண்ணை அறைவது தவறில்லை என ஒரு கதாநாயகன் கூறி அத்திரைப்படம் பெரும் வெற்றியும் பெற்றால், அது மிகவும் ஆபத்தானது.

Related News