Oct 20, 2025
Thisaigal NewsYouTube
அரசியல் முதல் சினிமா பிரமுகர்கள் வரை இந்திரஜா  கார்த்திக் திருமணத்துக்கு யாருக்கெல்லாம் அழைப்பு?
சினிமா

அரசியல் முதல் சினிமா பிரமுகர்கள் வரை இந்திரஜா கார்த்திக் திருமணத்துக்கு யாருக்கெல்லாம் அழைப்பு?

Share:

இந்தியா, பிப்ரவரி 28 -

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கும், இயக்குநர் கார்த்திக்கிற்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் வருகிற மார்ச் மாதம் 24-ம் தேதி நடைபெற இருக்கிறது. திருமண நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு பிஸியாக ஷூட்டிங்கிற்குச் சென்றுவிட்டார் இந்திரஜா. `தளபதிக்கு அப்புறம் தளபதியின் தந்தை' என்கிற கேப்ஷனுடன் புது புராஜெக்ட் குறித்து அறிவித்திருந்தார் இந்திரஜா. திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை இறுக்கமாக தக்க வைத்துக் கொள்ள நிச்சயம் முயற்சி செய்வார் எனத் தெரிகிறது.

இந்நிலையில் திருமண வேலையில் இந்திரஜா - கார்த்திக் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர். ரோபோ சங்கர் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் பலரையும் திருமணத்திற்கு அழைப்பு விடுத்து பத்திரிகை வைத்திருக்கிறார். தவிர, நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் பத்திரிகை வைத்திருக்கிறார்.

அத்துடன் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி உட்பட பல நட்சத்திரங்களுக்கும் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று அழைப்பிதழ் வைத்து வருகிறார். இந்திரஜாவும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மாப்பிள்ளை கார்த்திக்கும் திரைப்பட இயக்குநர் என்பதால் இவர்களுடைய திருமண நிகழ்வில் அரசியல் - வெள்ளித்திரை - சின்னத்திரை என முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார்கள் எனத் தெரிகிறது.

இந்திரஜா, திருமண வேலையில் பிஸியாக இருந்தாலும் அது குறித்த தகவல்களை உடனுக்குடன் அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து விடுகிறார். பிரமாண்டமாக நடைபெற இருக்கும் இந்தத் திருமண நிகழ்வுக்காக இந்திரஜா - கார்த்திக்கின் ரசிகர்கள் பலரும் காத்திருப்பதாக கமென்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Related News