கோழி விலையை கட்டுப்படுத்துவதற்கு அதன் விற்பனைக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை மானியத்தை அரசாங்கம் வரும் நவம்பர் முதல் தேதியுடன் முடிவுக்கு கொண்டு வருகிறது. உதவித் தொகையை கட்டம் கட்டமாக மறு இலக்குக்கு உரிய அணுகுமுறைக்கு நிகராக கொண்டு வருவதற்கு ஏதுவாக உதவித் தொகை வழங்குவதை ரத்த செய்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாயம், உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமாட் சாபு தெரிவித்தார்.
எனினும் முட்டை விலைக்கு குறிப்பாக A,B,C ஆகிய கிரேட்டுகளுக்கு அரசாங்கம் வழங்கி வந்த உதவித் தொகை தொடரும் என்று முகமட் சாபு குறிப்பிட்டார். முட்டை, கோழி ஆகியவற்றுக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து அரசாங்கம் 380 கோடி வெள்ளி உதவித் தொகைக்கான செலவினத்தை ஏற்றுக்கொண்டுள்ளது என்று முகமட் சாபு தெரிவித்தார்.