Oct 20, 2025
Thisaigal NewsYouTube
25 வருடங்களுக்கு பின் பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் #ARRPD6 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது
சினிமா

25 வருடங்களுக்கு பின் பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் #ARRPD6 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது

Share:

இந்தியா, மே 03-

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடிகர் பிரபு தேவா சுமார் 25 வருடங்களுக்கு பின் கை கோர்த்துள்ள, திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பிரமாண்டமாக துவங்கியது.

Behindwoods வழங்கும், இந்த திரைப்படத்தை Behindwoods நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான மனோஜ் NS. இயக்கி வருகிறார். இப்படம் குறித்து வெளியாகியுள்ள தகவலில், #ARRPD6 படத்திற்கான முன்னோட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்து, முதல் கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கி உள்ளது. இதில் நடிகர்கள் பிரபு தேவா, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்படும் AR ரஹ்மானின் கலக்கலான பாடல்கள் இசையமைக்கப் பட்டு வருவதாகவும். யோகி பாபு பங்கேற்கும் காட்சிகள் அடுத்த கட்ட படப்பிடிப்பின் போது படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. AR ரஹ்மான் மற்றும் பிரபு தேவாவை வைத்து ஒரு ஸ்டைலிஷ் Promo-வை படத்தின் இயக்குனர் மனோஜ் NS சென்னையில் படமாக்கி உள்ளார். படத்தின் தலைப்பை அறிமுகப்படுத்தும் Promo விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

25 ஆண்டுகளுக்கு பிறகு AR ரஹ்மானும், பிரபு தேவாவும் இணைந்துள்ள படத்தின் தலைப்பு என்ன என்பது ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் ஒன்றாக உள்ளது. இப்படம் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் தரமான, நகைச்சுவை காட்சிகள் கொண்ட சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டில் 2025-ல் பான்-இந்திய படமாக திரைக்கு வர உள்ளது.

இப்படத்தை, மனோஜ் NS, திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் இலக் தயாரித்து வருகின்றனர். அனூப் வி.எஸ் ஒளிப்பதிவிற்கும், ஷானு முரளிதரன் தயாரிப்பு வடிவமைப்பிற்கும், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டிங்கிற்கும் பொறுப்பு ஏற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News