Oct 17, 2025
Thisaigal NewsYouTube
1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்தவர்களின் சந்திப்பு
சினிமா

1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்தவர்களின் சந்திப்பு

Share:

1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாகத் திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டனர். 2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இச்சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டுள்ளது.

Related News