நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் பிரபலம் ஆன ஹீரோவாக இருந்து வருகிறார். அவர் தற்போது ராஜா சாப், ஸ்பிரிட், சலார் 2 போன்ற படங்களைக் கைவசம் வைத்து இருக்கிறார்.
45 வயதாகும் பிரபாஸ் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது தான் அவரிடம் நீண்ட காலமாக பலரும் கேட்டு வரும் கேள்வி. இந்நிலையில் பிரபாஇன் உறவினர் ஒருவர் கொடுத்த பேட்டி தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
கடவுள் அருளால் விரைவில் பிரபாஸுக்குத் திருமணம் ஆகும். குடும்பம் அதற்கான முயற்சியில் இருக்கிறோம் எனக் கூறி இருக்கிறார். அதனால் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் நடக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.