Jan 16, 2026
Thisaigal NewsYouTube
ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா நானி?
சினிமா

ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா நானி?

Share:

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தைத் தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாகிறது.

படத்தின் விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் சூடு பிடித்துள்ளது. அண்மையில் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரபல இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராஜமௌலி தன்னுடைய இயக்கத்தில் பிரமாண்ட உருவாக உள்ள 'மகாபாரதம்' படத்தில் நடிகர் நானியை ஒரு பகுதியில் நடிக்க வைக்க உள்ளதாகத் தெரிவித்தார். இதனை கேட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதற்கிடையில், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி 29' என்ற படத்தை தற்பொழுது இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் 'மகாபாரதம்' திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News