வேள்பாரி கதையை இயக்குனர் ஷங்கர் திரைப்படமாக்க இருக்கிறார் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே செய்திகள் கசிந்தது. இந்நிலையில் எந்திரனுக்குப் பிறகு வேள்பாரி தான் என்னுடைய கனவு படம் என ஷங்கர் புத்தக விழாவொன்றில் தெரிவித்திருக்கிறார்.
வரலாற்றுக் கதைகள் இந்திய சினிமாவில் வெற்றியைக் கொண்டாடி வரும் நிலையில் தான் ஷங்கர் இந்த ஒரு முடிவை எடுத்திருக்கிறார். வேள்பாரி புத்தக பதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி விற்பனை ஆக்கிக் கொண்டிருக்கும் சிறப்பை கொண்டாடும் வகையில் அப்புத்தக விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் சங்கருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். தன்னுடைய ஓய்வு நாளில் படிப்பதற்காகத் தாம் வேள்பாரி புத்தகத்தை எடுத்து வைத்திருப்பதாக அவர் கூறியிருந்தார்.
இந்த வரலாற்றுக் கதையை படமாக்க எப்படியும் ஆயிரம் கோடி பட்ஜெட் தேவைப்படும். ஷங்கர் இதுவரை அதிகபட்ச பட்ஜெட் போட்டு லாபம் கொடுத்தது ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் தான்.
இதனால் மீண்டும் தன்னுடைய கனவு படத்திற்காக ஷங்கர் ரஜினியுடன் கைக்கோர்க்க வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கக்கூடும். ரஜினிகாந்தின் கூலி பட வேலைகள் முடிவடைந்த பிறகு இந்த அறிவிப்பு வெளியாகலாம்.