இந்தியா, ஏப்ரல் 15-
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள படம் தான் GOAT. இந்த படம் தளபதி விஜய் அவர்களின் 68வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தல அஜித் அவர்களை வைத்து "மங்காத்தா" என்கின்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, இப்பொழுது முதல் முறையாக தளபதி விஜய் அவர்களை வைத்து "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படத்தை இயக்கிய வருகின்றார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தளபதி விஜய் அவர்களுடைய குரலில், மதன் கார்க்கியின் வரிகளில், யுவன் சங்கர் ராஜா இசையில் இன்று "கோட்" திரைப்படத்திலிருந்து முதல் சிங்கள் பாடல் வெளியாகி, தளபதி விஜயின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அந்த பாடலில் உள்ள பல தகவல்களை இணையவாசிகள் D-Code செய்ய தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் இப்பாடலில் இதற்கு முன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான "சென்னை 28", "சரோஜா", "மங்காத்தா", "மாசு என்கின்ற மாசிலாமணி", "பிரியாணி" மற்றும் "மாநாடு" ஆகிய திரைப்படங்களின் குறியீடுகள் இப்பாடல் முழுவதும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.