ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.18-
மலேசியாவின் பிரபல நடிகையான டான் ஸ்ரீ மிஷேல் யோ, பினாங்கு, ஜார்ஜ்டவுனில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார்.
63 வயதான அவர், ரேட் கார்டன் ஃபூட் பெரடையிஸ் என்ற உணவகத்தில் திடீரெனத் தோன்றிய போது பார்வையாளர்கள் அவரைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
அதன் பின்னர் நீல நிற உடை ஒன்றை அணிந்து வந்து, மேடையில் பல மலாய் பாடல்களைப் பாடினார். அங்கிருந்த மக்களும் அவருடன் சேர்ந்து உற்சாகமாகப் பாடி மகிழ்ந்தனர்.
அங்கிருந்தவர்களில் பலர் தங்கள் தொலைபேசிகளில் அவருடன் படம் எடுத்துக் கொண்டனர்.
விளம்பரப் படம் ஒன்றிற்காக மிஷேல் யோ மலேசியாவிற்கு வந்திருப்பதாக ஒரு தகவலும், ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றிற்காக வந்திருப்பதாக மற்றொரு தகவலும் கூறுகின்றது.