இந்தியா, ஜூன் 25-
வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமான வெங்கல்ராவ் மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருவதாக, வெளியிட்டுள்ள வீடியோ பார்ப்பவர்கள் நெஞ்சங்களை பதற வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஹீரோ - ஹீரோயினாக தங்களை நிலைநாட்டிக் கொள்வது எவ்வளவு கடினமான ஒன்ரோ... அதை விட கடினமானது தங்களை ஒரு குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும், காமெடி நடிகராகவும் ரசிகர்கள் மனதில் நிலைக்க வைப்பது. அதிலும் முன்னணி காமெடி நடிகர்கள் என்றால் அவர்களை விரல் விட்டு சொல்லி விடலாம்.
செந்தில் - கவுண்டமணிக்கு பின்னர், ரசிகர்களை காமெடியால் கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்தவர் வடிவேலு தான். ஆனால் இவருடன் காமெடி செய்யும் நடிகர்களை கூட இவர் தான் தேர்வு செய்வார். இவரின் அனுமதி இல்லாமல் அவர்கள் வேறு யார் படத்திலும் நடிக்க கூடாது, மீறி ஒருவேளை நடித்து விட்டால் அவர்களின் சோலி முடிந்துவிடும். அவர்களை வேறு எந்த ஒரு படத்திலும் கமிட் செய்ய கூடாது என கேகூறி அவர்களின் வயிற்று பிழைப்புக்கே உலை வைத்து விடுவார் என கூறுபவர்கள் பலர். ஆனால் இவர் முன்னணியின் இருந்த போது கூட காமெடியில் தன்னுடைய தனித்தன்மை மூலம் ஜொலித்தவர் விவேக் ஒருவரே.
இப்படி பல காமெடி படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வாய்த்த இவர், இன்று தன்னுடைய சிகிச்சைக்கு கூட பணம் இல்லை என வேதனையோடு பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இவருக்கு ஏற்கனவே உடல்நல பாதிப்பு இருந்த நிலையில், சமீபத்தில் வெங்கல்ராவின், ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து, தனது சொந்த ஊரான விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ செலவிற்கு நடிகர்கள் மற்றும் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் தனக்கு உதவுமாறு பேச கூட முடியாத நிலையில் கேட்டுள்ளார். இவருக்கு கோலிவுட் பிரபலங்கள் உதவ வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. அதிலும் வடிவேலு ஏதேனும் உதவுவாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.