Jan 16, 2026
Thisaigal NewsYouTube
"ஜப்பானில் நிலநடுக்கம்; 28வது மாடியில் தங்கியிருந்தோம்" -ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா
சினிமா

"ஜப்பானில் நிலநடுக்கம்; 28வது மாடியில் தங்கியிருந்தோம்" -ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா

Share:

சென்னை, மார்ச் 21 -

ஜப்பான் ரசிகர்களும் இப்படத்தைக் கைதட்டி உற்சாகத்துடன் பார்த்த கணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதற்காக ராஜமெளலி மற்றும் அவரின் மகன் கார்த்திகேயாவும் ஜப்பான் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் கார்த்திகேயா, ஜப்பானில் தங்கியிருந்தபோது நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை விடுப்பட்டதாகவும், நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது ஐ-வாட்ச்சில் வந்த எச்சரிக்கைச் செய்தியைப் பதிவிட்டுள்ள அவர், "ஜப்பானில் இப்போது பயங்கர நிலநடுக்கம் உணர்ந்தோம். நாங்கள் 28வது மாடியில் இருந்ததால், தரை மெதுவாக அதிர ஆரம்பித்து, நிலநடுக்கத்தை உணர சிறிது நேரமானது. நாங்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தோம். ஆனால், அங்கிருக்கும் மக்கள் மழை பெய்வதுபோல் எங்கும் அசையாமல் நின்றிருந்தனர்" என்று பதிவிட்டுள்ளார்.

கார்த்திகேயா 'பிரேமலு' படத்தின் மூலம் விநியோகஸ்தரானார். தற்போது இயக்குநரகாவும், தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் களமிறிங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News