இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் பல சூப்பர் ஹிட் படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் ஒன்று சிவாஜி கணேசன் - ரஜினிகாந்த் - ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த திரைப்படம் படையப்பா. வசூலில் மாபெரும் சாதனை படைத்த இப்படம், இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை சௌந்தர்யா. ஆனால், முதன் முதலில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கத் தேர்வானது சௌந்தர்யா கிடையாதாம். அன்றைய காலக் கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நக்மா தான் முதலில் கதாநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆனால், சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேறி விட்டார். அதன் பிறகு சௌந்தர்யா இப்படத்தில் கதாநாயகியாக நடித்தாராம்.