நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்து இருக்கும் லியோ படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின் கெளதம் வாசுதேவ் மேனன்,சாண்டி,மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இன்றும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள "நா ரெடி" பாடலின் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் வைப் செய்ய வைத்தது.